அதிமுக மாவட்ட செயலாளர்களின் நீக்கம் குறித்த தினகரனின் அறிவுப்புக்கு எதிராக போராட்டம்
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் எம்.சி.சம்பத்தை நீக்கிவிட்டு விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வனையும், மேற்கு மாவட்டத்துக்கு கடலூர் எம்பி அருண்மொழித்தேவனை நீக்கிவிட்டு பாலமுருகனையும் மாவட்டச் செயலாளர்களாக தினகரன் அறிவித்தார்.
இதனை எதிர்த்து அதிமுக (அம்மா) அணியினர் கடலூரில் நகரச் செயலாளர் குமரன் தலைமையில் சுமார் 100 பேர் உழவர் சந்தை அருகே தினகரன் படத்தை கொளுத்தியும், தினகரன் படத்தை செருப்பால் அடித்தும் போராட்டம் நடத்தினர்.
விருத்தாசலத்தில் நகரமன்ற தலைவர் அருளழகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் தினகரன் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடத்தினர். இதேபோல் சிதம்பரம் காந்தி சிலை அருகில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- சுந்தரபாண்டியன்