Published on 17/04/2020 | Edited on 17/04/2020
சீனாவில் இருந்து மூன்று லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் சரக்கு விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்தது. இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, தமிழகம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு முதலில் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தமிழகத்துக்கு முதல்கட்டமாக 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வந்துள்ளதாகத் தகவல் கூறுகின்றன. இந்தக் கருவிகள் மூலம் கரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சீன நிறுவனத்திடம் இந்திய அரசு கோரிய நிலையில், தற்போது 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மட்டுமே வந்துள்ளது.