தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27 ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் 2- வது வார்டில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா தோல்வியடைந்தார். 1,343 வாக்குகள் குறைவாக பெற்று திமுகவின் சுப்புலட்சுமியிடன் தோல்வி அடைந்தார்.
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (288/515)
திமுக கூட்டணி: 136 முன்னிலை
அதிமுக கூட்டணி: 150 முன்னிலை
அமமுக:2 முன்னிலை
ஒன்றிய கவுன்சிலர் பதவி (1252/5067)
திமுக கூட்டணி; 579 முன்னிலை
அதிமுக கூட்டணி: 586 முன்னிலை
அமமுக: 29 முன்னிலை
பிற கட்சிகள்- 58 முன்னிலை