Skip to main content

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு... ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறைகளை கொண்ட பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகைதான். அதுவும் இந்தமுறை ஒன்பது நாட்கள் வரை விடுமுறை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் சொந்த ஊரைவிட்டு வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்புவார்கள். அதற்காக முன்பே ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம்.
 

pongal

 

தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில், பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஜனவரி 10ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதேபோல் ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்கும். 

ஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 16ஆம் தேதியும் தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 20ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 22ஆம் தேதியும் தொடங்கும்.

 

 

சார்ந்த செய்திகள்