Skip to main content

அமைச்சர் ப்ளக்ஸை கிழித்த அமைச்சர் தரப்பு..!!

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
r


ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமண விழாவிற்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராகவும் தமிழக வக்பு வாரிய தலைவர் பதவியையும் வகித்து வருகிறார்.  இந்நிலையில் அன்வர் ராஜாவின் இல்லத் திருமண விழாவிற்காக வருகை தரும் அமைச்சர்களின் புகைப்படங்களுடன் ராமநாதபுரத்தின் முக்கிய பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகளில் அமைச்சர்களை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த நிலையில் பல பேனர்களில் அன்வர் ராஜா படம் மற்றும் அமைச்சர் உதயகுமார்,  முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோருடைய படங்கள் கிழிக்கப்பட்டு இருந்தது. இது உள்ளூரிலுள்ள தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டனின் தூண்டுதலால் நடைப்பெற்றது என்பதால்  சலசலப்பு ஏற்பட்டது.

 

r

 

இந்நிலையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது நாடாளுமன்ற உறுப்பினர்  அன்வர்ராஜா சார்பாக முதல்வரையும் அமைச்சர்களையும் வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் அனைத்தும்  கிழிக்கப்பட்டும்  சேதப்படுத்தப்பட்டும்  இருந்த நிலையில்  தற்பொழுது  நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா இல்ல திருமண விழாவிற்கு அமைச்சர்களை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பல போர்டுகள் கிழிக்கப்பட்டு சேதப் படுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

r2

 

சார்ந்த செய்திகள்