Published on 10/06/2020 | Edited on 10/06/2020
தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசுகையில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஆராய, மருத்துவ கல்வி இயக்குனரகம், பொது சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரி அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பது குறித்து இந்த குழு ஆராயும். கரோனா இறப்பு விகிதம் எண்ணிக்கை குறித்து அரசு வெளிப்படையான தகவல்களை வெளியிட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 5000 படுக்கை வசதிகள் உள்ளது, அது 10 ஆயிரமாக உயர்த்தப்படும். தேவைக்கேற்ப மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவர். கரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்றார்.