Skip to main content

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை

Published on 10/05/2018 | Edited on 20/07/2018

 


 

‘காலா’ படத்தின் இசை வெளியிட்டு விழாவை ரஜினிகாந்த் புதன்கிழமை சென்னை ஒய்.எம்.சி.ஏ விளையாட்டு மைதானத்தில் தன் ரசிகர்களுடன் பிரமாண்டமாக நடத்தினார். அதனைத்தொடர்ந்து இன்று அவர் தனது மன்ற பணிகளை மேலும் தீவிரப்படுத்த, அனைத்து மாவட்ட மன்ற நிர்வாகிகளையும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். காலை 10.45 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணி வரை நடைபெற்றது. மாவட்டங்களிலிருந்து வந்த முக்கிய நிர்வாகிகள் 32 பேர் கலந்து கொண்டனர். அவர்களுடன் தலைமை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

படங்கள்: எஸ்.பி.சுந்தர்
 

சார்ந்த செய்திகள்