Skip to main content

‘ரயில் சண்டையை யாராலும் மறக்க முடியாது’; ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி அஞ்சலி

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

Rajini Tribute to Famous Stunt Master Judo Rath

 

பிரபல சினிமா சண்டைப் பயிற்சியாளரும் நடிகருமான ஜூடோ ரத்தினம் வயது மூப்பினால் காலமாகியுள்ளார். 93 வயதான ஜூடோ ரத்தினம் தனது சொந்த ஊரான குடியாத்தத்தில் வசித்து வந்தார். வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜூடோ ரத்தினம்  உயிரிழந்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், திரைப்பிரபலஙகள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் மறைந்த ஜுடோ ரத்தினத்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, “ஒரு கன்னட படத்தின் மூலம் ஜுடோ ரத்தினத்திற்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவருடன் பணியாற்றிய பலர் பெரிய பெரிய மாஸ்டர்களாகியிருக்கின்றனர். மிகவும் மென்மையானவர். முரட்டுக்காளை படத்தில் அவர் அமைத்துக்கொடுத்த ரயில் சண்டையை இன்னும் யாரலும் மறக்கமுடியாது. பூரணமாக வாழ்ந்து இன்று அமரராகி இருக்கிறார். ஜுடோ ரத்ததினத்தின் ஆத்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்