Skip to main content

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஆவணங்கள் ஐகோர்ட்டில் தாக்கல்

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

 


உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் மீதான நடவடிக்கையை கைவிட்டது தொடர்பான ஆவணங்கள்  தாக்கல் செய்யப்பட்டன. 

 

r

 

மதுரையை சேர்ந்த மகேந்திரன்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011- 2013ம் ஆண்டு வரை அமைச்சராக பதவி வகித்தபோது, பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர் மீது வழக்கு பதிய லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனு தொடர்பான விசாரணை ஏற்கனவே நீதிமன்றத்தில் நடந்தபோது, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி விசாரணையை கைவிட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது.

 

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கடந்த 1996ம் ஆண்டு, திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதன் பின்னர்,  நீதிபதிகள் விசாரணை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக பொதுத்துறை செயலர் தரப்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்கள் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டன. 

 

இதையடுத்து நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சார்ந்த செய்திகள்