2004 டிசம்பா் 26 இதே நாள் விடியும் போது கோழி கூவுவதற்கு பதில் கடற்கரை கிராமங்களில் மரண ஓலம் விண்ணை பிளந்தது. திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்கள் குழந்தைகள், சிறுவா்கள், பொியவா்கள், முதியவா்கள் என கடற்கரை கிராமங்களில் மடிந்து கிடந்தன. இது சுனாமி எனும் பேரலை தனது கோர பசியை தீா்த்த நாள்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முடிந்த அன்று இரவு மற்றும் அதிகாலை 1 மணிக்கு இந்தோனேசியா சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பூமிக்கு கீழே 1600 கி.மீ நீளத்துக்கு நிலத்தட்டுகள் சாிந்தன. இதன் தாக்கம் இந்திய பெருங்கடலில் உருவான ராட்சத அலைகள் கடற்கரை கிராமங்களை துவம்சம் செய்து சுக்கு நூறாக்கியது.
இதில் தமிழகத்தில் கன்னியகுமாி, நாகப்பட்டினம், சென்னை, கடலூா் மாவட்டங்களில் உள்ள ஓட்டு மொத்த கடற்கரை கிராமங்களையும் சுனாமி எனும் அந்த பேரலை வாாி சுருட்டியது. இதில் கன்னியாகுமாி மாவட்டத்தில் குளச்சல், கொட்டில்பாடு, கடியப்பட்டணம், முட்டம், மணக்குடி, கோவளம், கன்னியாகுமாி, தூத்தூா், இரையுமன்துறை என மீனவ கிராமங்களில் 1117 பேரை பலி வாங்கியது. இதில் குளச்சல் மீனவ கிராமத்தில் மட்டும் 414 இறந்தனா். நாகப்பட்டினம் மாவட்டத்தில் தான் அதிகபடியான உயிா் பலி 6039 போ் பலியானாா்கள்.
இதில் பெற்றோா்கள், உடன் பிறந்தவா்கள், கணவன் மனைவிகள், குழந்தைகள், உறவுகள் என எல்லாரையும் இழந்தனா். இறந்தவா்களை அந்தந்த மீனவ கிராமங்களில் ஓரே இடத்தில் புதைக்கப்பட்டது. இந்த கொடூர சம்பவத்துக்கு உலகமே கண்ணீா் வடித்தது. சுனாமி கோர தாண்டத்தின் 15 ஆவது ஆண்டு இன்று கடற்கரை கிராமங்களில் கடைபிடிக்கபடுகிறது. இறந்தவா்களை புதைக்கப்பட்ட இடத்தில் பெற்றோா்களும் உறவினா்களும் கண்ணீா் வடித்து அஞ்சலி செலுத்தினாா்கள். இதையொட்டி கடற்கரை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய தெற்காசிய மீனவா் தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலாளா் பாதிாியாா் சா்ச்சில்....சுனாமிக்கு பிறகு குமாி மாவட்டத்தில் உள்ள 48 மீனவ கிராமங்களிலும் பாதுகாப்பற்ற நிலையே தான் உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவா்களின் பாதுகாப்பும் கேள்வி குறியாக தான் உள்ளன. ஓகி புயலின் கோரதாண்டவம் போிடா்களை எதிா்கொள்வதில் கூட பின்னடைவு தான் என்றாா்.