Skip to main content

ஐ.பி.யிடம் ஆசி வாங்கிய தேனி பொறுப்பாளர்கள்!

Published on 04/07/2018 | Edited on 04/07/2018
nw


தமிழகம் முழுவதும் திமுக பொறுப்பாளர்களை செயல் தலைவர் ஸ்டாலின் களை எடுத்து வருகிறார். அதுபோல் தேனி மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த ஜெயக்குமாரை  அதிரடியாக மாற்றிவிட்டு  முன்னாள்  எம்.எல்.ஏ.வான கம்பம் ராமகிருஷ்ணனை தேனி மாவட்ட  பொருப்பாளராக  நியமித்தார்.  இதனால்  ஜெயக்குமார்  ஆதரவாளர்கள் மத்தியில்  ஒரு புரம்  அதிருப்தி இருந்தாலும் பெரும்பலான உ.பி.கள் மத்தியில்  ராமகிருஷ்ணனை மாவட்ட பொறுப்பாளராக போட்டதை  வரவேற்று வருகிறார்கள்  அதுபோல் முன்னாள் எம்எல்ஏகளான மூக்கையா. லட்சுமணன். கம்பம் செல்வேந்திரன் உள்பட மாவட்டத்தில் உள்ள  கழக நிர்வாகிகள்   அனைவரும்  ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்து  தெரிவித்தனர்.  அதுபோல்  பதவி பறிக்கப்பட்ட ஜெயக்குமாரும் நேரில் சென்று  வாழ்த்து தெரிவித்துள்ளார்.


            இந்த நிலையில் தான் கழக துணை பொதுச் செயலாளரும்.முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியை திண்டுக்கல்  இல்லத்தில் சந்தித்த கம்பம் ராமகிருஷ்ணனோ அவருக்கு  ஏலக்காய்  மாலை  அணிவித்து  ஆசி வாங்கினார். அதை தொடந்து தேனி மாவட்டத்தில்  புதிதாக நியமிக்கப்பட்ட  தேனி ஒன்றிய  பொறுப்பாளர் சக்கரவர்த்தி  உள்பட  பல பொருப்பாளர்களும்  புதிய பொறுப்பாளர் ராமகிருஷ்ணனுடன் வந்து  ஐ.பி.க்கு சால்வை, மாலை அணிவித்து ஆசி பெற்று  சென்றனர்
.        கழக துணைப் பொதுச் செயலாளரான ஐ.பி. தென் மாவட்டத்தை பொருத்தவரை கட்சியில்  முக்கிய விஐபி யாக  இருந்து  வருகிறார்  அதோடு தேனி மாவட்டத்தை பொறுத்தவரை  ஐ.பி.தான் கட்சி வளர்ச்சிக்கும்  கட்சி  பொறுப்பாளர்களையும் நியமிக்க செயல் தலைவர்  ஸ்டாலினுக்கு ஆலோசனையும்  வழங்கி வருகிறார்.  அந்த  அடிப்படையில் தான்  தற்பொழுது  பதிய பொறுப்பாளர்   ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்  என்பது தெரிய வருகிறது. 

சார்ந்த செய்திகள்