Skip to main content

நான் படிக்கவில்லை... அதனால... - லாரன்ஸ் பேட்டி

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
Raghava-Lawrence



கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று பார்வையிட்டார். அப்போது புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 வீடுகளை கட்டித் தருவதாக கூறியிருந்தார். தொடர்ந்து அந்தப் பகுதிகளில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வரும் அவர், ஆலங்குடி பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்துப் பேசினார்.
 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
 

வளமாக வாழ்ந்தவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்குமா என்று சாலையில் நிற்பது வேதனை அளிக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு வீடு கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் ஒரு பகுதியாக சமூகசேவகர் கணேசன் இல்லத்துக்குச் சென்று அவரைப் பார்த்தேன். அவரிடம் பணத்தை கொடுக்கவில்லை. ஆனால், வீடு கட்ட திட்டம் வரையப்பட்டு வருகிறது. இதைப்பார்த்து பலரும் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். 
 

அரசியலுக்கு வரத் தனித் தகுதிகள் வேண்டும் என்று நினைக்கிறேன். நான் படிக்கவில்லை. மேலும், அரசியலுக்கு வர என்னிடம் தகுதி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். நான் ஆன்மீகவாதி. அதனால், தற்போது அரசியலில் இருப்பவர்களுக்கு அந்தத் தகுதி உள்ளதா என்பதைப் பற்றி கூற விருப்பம் இல்லை.
 

அடுத்தகட்டமாக மரக்கன்றுகள் வழங்க ஆலோசனை செய்கிறேன். இந்தப் புயல் பாதிப்பால் விவசாயிகள் மனமுடைந்து விடாமல், மீண்டும் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்