விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி அருகே உள்ளது செ.புதூர். இங்கு கல்குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியில் இன்று காலை 11 மணி அளவில் மலையில் ராட்சஷ வெடி வைத்து மலையை உடைத்தனர். அப்போது பாறைகள் சிதறி உருண்டுஅங்கு தொழிலாளியாக வேலை பார்த்து வந்த முட்டத்தூரை சேர்ந்த பூங்காவனம் மகன் ராமகிருஷ்ணன் என்பவர் தலைமீது பாறைகள் விழுந்ததில் அவர்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபோன்று பாறைகளுக்கு வெடி வைக்கும் போது அருகில் யாரும் இருக்கக்கூடாது என எச்சரிக்கை செய்து அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களை அப்புறப்படுத்திவிட்டு அதன் பிறகே வெடிவைத்து தகர்ப்பது வழக்கம். ஆனால் இன்று அஜாக்கிரதை காரணமாக தொழிலாளி ராமகிருஷ்ணன் உயிரிழக்க நேர்ந்தது கண்டு அங்குள்ள தொழிலாளர்கள் வேதனையில் கண்ணீர் வடிக்கிறார்கள்.
பொதுவாக விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் கண்டமங்கலம் ஒலக்கூர் மயிலம் செஞ்சி திண்டிவனம் ஆகிய பகுதிகளில் கல்குவாரிகள் கிரானைட் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதுதொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே போன்று அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அவ்வப்போது இதுபோன்ற உயிரிழப்பும் ஏற்படுகிறது. அரசின்கனிம வளத் துறை கட்டுப்பாட்டில் நடைபெறும் இந்த குவாரிகளில் முறையான ஆய்வுகள் மேற்கொள்வது இல்லை. குவாரிகள் அரசு அளிக்கும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. நடைமுறைப்படுத்துவதில்லை. எனவே உயிரிழப்புகள் ஒரு தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகிறது. இனிமேலாவது கனிமவளத்துறை குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமா? என்கிறார்கள் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள்.