ஜெயிலர் திரைப்படத்தின் கதையோட்டத்துடன் கூடிய பாடலா? சூப்பர் ஸ்டார் ரஜினியின் சினிமா எதிரிகளுக்குப் பாடம் புகட்டும் பாடலா? என்று வியக்கும் அளவுக்கு இருக்கிறது, ஜெயிலர் செகன்ட் சிங்கிள் ப்ரமோவாக வெளிவந்திருக்கும் ‘ஹுக்கும்’ பாடலின் வரிகள். இந்தப் பாடலில் ரஜினியின் மேனரிஸத்தை ரொம்பவே சிலாகித்து எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் சூப்பர் சுபு. அனிருத் குரலில் அலப்பறையாக ஒலிக்கிறது ‘அலப்பற கெளப்புறோம்’ பாடல். அனிருத்தின் துள்ளல் இசைக்கு கேட்கவா வேண்டும்? ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கிறார்கள். ஏற்கனவே வெளிவந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் - காவாலா பாடலில் தமன்னா பெயரைத் தட்டிச் சென்ற நிலையில், இந்த ஹுக்கும் பாடல் ரஜினி ரசிகர்களின் பசிக்கு செம தீனியாக இருக்கிறது.
‘நடக்குற நடை புயலாச்சே! முடி ஒதுக்குற ஸ்டைலாச்சே!’ என்ற வரி வழக்கமாக ரஜினி பாடல்களில் வருவதுதான். ‘இவன் பேரை தூக்க நாலு பேரு! பட்டத்தைப் பறிக்க நூறு பேரு!’ என்ற வரி, ரஜினி மீதான நிகழ்காலத் திரையுலகத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதாக இருக்கிறது.
ரஜினி மீதான ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, ‘அலப்பறை கிளப்புறோம்! தலைவரு நிரந்தரம்!’ என்றும் ‘நீ என்ட் கார்டு வச்சா.. இவன் ட்ரென்டா மாத்தி வப்பான்! நீ குழிய பறிச்சு வச்சா.. இவன் மலையில் ஏறி நிப்பான்’ என ரஜினியின் உயரத்தை தெளிவுபடுத்துகிறது ஹுக்கும் பாடல். ரஜினி ரசிகர்களை ரொம்பவே உசுப்பேற்றியிருக்கிறது, ஜெயிலர் திரைப்படத்தின் ஹுக்கும் பாடல்