Published on 16/03/2020 | Edited on 16/03/2020
கரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
![pudukkottai, thiruvarur districts anganwadi schools holidays](http://image.nakkheeran.in/cdn/farfuture/FXUAxldCeqwufh0IUBQ5cN51i-IUIIuTXaMQwjPERU0/1584351466/sites/default/files/inline-images/anganwadi444.jpg)
இந்த நிலையில் அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்குத் தேவையான சத்துணவைத் தயாரித்து வீடுகளுக்குச் சென்று வழங்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளுக்கு மார்ச் 31- ஆம் தேதி வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.