சொத்துக்காக தன் தாயையே இரும்பு குழாயில் அடித்துக் கொன்ற மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது மகிளா நீதிமன்றம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்க தாலுகா திருநாலூரை சேர்ந்தவர் வசந்தா (60). அவரது மகன் சமரசம்(35). தனது குடும்பத்திற்கு சொந்தமான விவசாய நிலத்தை தனக்கு எழுதித் தரக்கோரி தாய் வசந்தாவிடம் சமரசம் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.
சொத்தை பிரித்துக் கொடுத்தால் சமரசம் விற்று செலவு செய்துவிடுவார் என்பதால் தாய் வசந்தா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2015- ஆம் ஆண்டு இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்த இரும்பு குழாயை எடுத்து தாய் வசந்தாவின் தலை உள்பட உடல் முழுவதும் சரமாறியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தா இறந்துவிட்டார்.
இது குறித்து அறந்தாங்கி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சமரசத்தை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலெட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட சமரசத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.