தமிழகத்தில் காலை ஒரு மணிநேரம் மாலை ஒரு மணிநேரம் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தீபாவளிக்கு நாடு முழுவதும் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை அடுத்து தமிழக அரசு சார்பில் கூடுதல் நேரம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் பாட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணிநேரம் மட்டுமே அனுமதிக்கப்படும் ஆனால் அந்த இரண்டு மணிநேரம் காலையா? மாலையா? என்பதை தமிழக அரசே முடிவெடுத்து கொள்ளலாம் என கூறியிருந்தது.
இந்நிலையில் தீபாவளியன்று தமிழகத்தில் காலை ஒரு மணிநேரம் மாலை ஒரு மணி நேரம் என பிரித்து மொத்தம் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்கலாம் எனக்கூறி நேரத்தையும் குறிப்பிட்டுள்ளது. அதாவது காலை 4 மணிமுதல் 5 மணி வரையும் இரவு 9 முதல் 10 மணிவரையும் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது உச்சநீதிமன்றம்.