Skip to main content

"முதலமைச்சராக சின்ன முடிவு கூட எடுக்க முடியல..." - தமிழிசை முன்னிலையில் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த புதுவை முதல்வர்

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

 

jkl

 

முதலமைச்சராக எந்த ஒரு சின்ன முடிவையும் எடுத்து செயல்படுத்த முடியவில்லை என்று புதுவை ஆளுநர் தமிழிசை முன்பு அம்மாநில முதல்வர் ரங்கசாமி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுவை மாநிலத்தில் என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதல்வராக ரங்கசாமியும், ஆளுநராகத் தமிழிசையும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் புதுவையில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் ரங்கசாமி., தமிழிசையை மேடையில் வைத்துக்கொண்டே மத்திய அரசு குறித்து பல்வேறு கருத்துக்களை தன்னுடைய ஆதங்கமாகத் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

விழாவில் பேசிய அவர், "புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றிக் காட்டுகிறோம் என்ற உறுதிமொழியைத் தேர்தல் நேரத்தில் கூறியிருந்தோம். ஆட்சிக்கு வந்து இத்தனை ஆண்டுகளில் அதை நம்மால் செய்ய இயலவில்லை. ஒரு சின்ன முடிவு எடுக்க வேண்டியதாக இருந்தாலும் மத்திய அரசின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது" என்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்