![property tax incentives chennai corporation dmk mk stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/wGffRaEuedt-dj8bCp7MbTHk8TmK7iJaqj97gJ_vi40/1602928438/sites/default/files/inline-images/MK%20STALIN%20NEW_4.jpg)
சொத்து வரி செலுத்துவோருக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரையாண்டு சொத்து வரியாக ரூபாய் 5 ஆயிரத்துக்குள் செலுத்தும் நபர்களுக்கு ஊக்கத்தொகையை 10 சதவீதமாக அதிகரியுங்கள். அரையாண்டு முடிந்து சொத்து வரி செலுத்துவோருக்கான ஊக்கத்தொகை கால அவகாசத்தை 45 நாளாக அதிகரியுங்கள். அரையாண்டு முடிந்து 15 நாளில் சொத்து வரி செலுத்தும் நபர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. அப்படிச் செலுத்தத் தவறினால் 16- ஆவது நாளில் இருந்து 2 சதவீத அபராதம் வசூல் என்று மாநகராட்சி கூறியுள்ளது. வலது கையால் ஒரு சலுகையைக் கொடுத்து விட்டு, இடது கையால் பறித்துக் கொள்வது போல் அறிவிப்பு இருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.