17 ஆவது மக்களவை தோ்தல் களம் சூடு பிடித்துள்ளது. இரண்டாவது கட்ட தோ்தலில் ஒரு பகுதியாக நேற்று தமிழகத்தில் வாக்கு பதிவு நடந்தது. இந்த நிலையில் 3 -ஆவது கட்ட தோ்தல் கேரளாவில் 23-ம் தேதி நடக்கிறது. இதில் கேரளா வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி போட்டியிடுவதால் அந்த தொகுதி நாடு முமுவதும் ஒரு எதிா்பாா்ப்பை உருவாக்கியுள்ளது.
கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் வயநாடு தொகுதி ஸ்டாா் அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட அறிவித்ததால் பாஜக தனது கட்சி வேட்பாளரை மாற்றி விட்டு கூட்டணி கட்சியான விடிஜேஎஸ் கட்சியின் தலைவா் துஷாா் வெள்ளம்பள்ளியை வேட்பாளராக அறிவித்தது. அதேபோல் கேரளா ஆளும் கட்சி கூட்டணியான எல்.டி.எப் கூட்டணியில் சிபிஐ வேட்பாளராக சுனீா் களத்தில் உள்ளாா்.
இதில் மூன்று தேசிய கட்சிகள் மும்முனை போட்டியில் வயநாடு தொகுதியில் களம் இறங்கியிருந்தாலும் நேரடி போட்டி என்பது ராகுல் காந்திக்கும் சிபிஐ சுனீருக்கும் தான். இதனால் அந்த தொகுதியில் எல்.டி.எப் தேசிய மற்றும் மாநில அளவில் தலைவா்களை களம் இறக்கி பிரச்சாரத்தை வேகப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் கடந்த16 மற்றும் 17-ம் தேதியில் ராகுல் காந்தி கேரளாவில் வயநாடு தொகுதி உட்பட நான்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டாா். இது கேரளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாளை வயநாடு தொகுதி உட்பட இரண்டு தொகுதியில் பிரச்சாரம் செய்ய பிாியங்கா கேரளா வருகிறாா். இதனால் கேரளா காங்கிரசாா் பெரும் உற்சாகத்தில் உள்ளனா்.