
லட்சத்தீவு, அந்தமான் தீவுகளுக்கு இடையே கடந்த மே 29ம் தேதி மையம் கொண்டிருந்த தென்மேற்குபருவக்காற்று தற்போது கேரளாவை ஒட்டிய தென்கிழக்கு தொடர்ச்சி மலைகளிலும் கேரளாவிலும் மழைபெய்ய தொடங்கியிருக்கிறது. அதன் எதிரொலியாக கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் செங்கோட்டை தொடரை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையின் மறுபக்கத்தில் தாக்கம் இருக்கிறது.

இதனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக குளிர்காற்று நிலையில் நேற்று இரவு மலையில் தொடங்கிய சாரல் மழை இன்று காலை வரை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழத்தொடங்கியுள்ளது. குறிப்பாக மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் போல் அருவித்தண்ணீர் மேலே உள்ள கொங்குமாங்கடல் பாண்டி அருவில் கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பயனிகள் குளிப்பதற்கு போலீஸ் தடை வித்துள்ளது. அருவியின் வேகம் அதிகமாக இருப்பதாலும், மலையில் உள்ள கற்கள், மரக்கட்டைகள் தள்ளிக்கொண்டு வரும் சூழல் இருப்பதால் அது குளிக்கும் பயணிகளூக்கு ஆபத்தாக முடியும் என்பதால் போலீஸ் தடை விதித்துள்ளது.