தனியார் நிறுவனங்களும் அலுவலங்களுக்கு விடுமுறை விட வேண்டும்: வருவாய் நிர்வாக ஆணையர்
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களும் அலுவலங்களுக்கு விடுமுறை விட வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அத்துடன் பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டும், சில இடங்களில் வெள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே கடந்த மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறும்போது, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்கள் இன்று விடுமுறை விட வேண்டும். வீட்டில் இருந்து ஊழியர்கள் பணி செய்ய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.