கடந்த 21தேதி தேனிமாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் இருக்கும் வைகை அணை முழுகொள்ளவு எட்டியதையொட்டி தேனி, மதுரை, சிவககங்கை, ராமநாதபும் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் பாசன வசதிக்காக துணை முதல்வரான ஒபிஎஸ் வைகை அணையை திறந்து வைத்தார். இதில் கலந்து கொள்வதற்காக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிகாலையிலையே திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டார். ஆனால் ஆண்டிபட்டிக்கு வத்தலக்குண்டு வழியாக தான் அமைச்சர் செல்ல வேண்டும் என்பதால் வத்தலக்குண்டு நகரசெயலார் பீர்முகமது அமைச்சரின் காலை டிப்பனுக்காக அமைச்சருக்கு பிடித்த ரத்தபொரியல், குடல் குழம்புடன் இடலி,தோசை ரெடி பண்ணி விட்டு இத்தகவலையும் அமைச்சருக்கு தெரியப்படுத்திவிட்டு கட்சிகாரர்கள் உடன் பைப்பாஸ் காளியம்மன் கோவில் அருகே முகாம் போட்டு இருந்தார்.
ஏற்கனவே நகர செயலாளர் பீர்முகமதுக்கும்,ஒன்றிய செயலாளர் பாண்டிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது இதனால் நகரசெயலார் செய்து வைத்து இருக்கும் குடல் குழம்பையும், ரத்தபொரியலையும் அமைச்சர் சாப்பிட்டு விட்டு நகரத்துடன் நெருக்கமாகி விடுவார் என்று நினைத்த ஒன்றிய செயலாளர் பாண்டியோ. அமைச்சர் கார் பைப்பாஸ் வருவதற்கு முன்பே அ.பிரிவில் தனது ஆதரவாளர்களுடன் நின்று அமைச்சர் காரை நிறுத்தி நகரத்தை காணவில்லை என்று கூறிவிட்டு அமைச்சர் காரிலையே உட்கார்ந்து கொண்டு காரை வைகை டேம்க்கு விடச்சொல்லிவிட்டார். அதன் பேரில் அமைச்சர் கார் பைபாஸ் ரோட்டை கடக்கும் போது நகரமும், ஆதரவாளர்களும் சத்தம் போட்டும் கூட அமைச்சர் கார் நிற்காமல் போய் விட்டது. இதனால் டென்ஷன் அடைந்த நகரசெயலார் பீர்முகமது போன் மூலம் ஒன்றிய செயலாளர் பாண்டியை தொடர் கொண்டு வாய்க்கு வந்தபடி பேசி திட்டி விட்டு உடனே அந்த ரத்தபொரியலையும்,குடல்குழம்பையும் தனது ஆதரவாளர்கள் மூலமாக அங்கையே வைக்க சொல்லி விட்டு தனது காரில் வைகை டேம்மிற்கே போய் பாண்டியை சத்தம் போட இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதை கண்ட அமைச்சர் ஏய் பேசாமல் இருங்கப்பா அண்ணன் பங்சனை முடித்துவிட்டு போகும் போது சாப்பிட்டு கொள்ளலாம் என்று கூறி இருவரையும் சமாதானப்படுத்தி வைத்தார்.
அதன்பின் ஒபிஎஸ் வைகை அணையை அமைச்சர்கள் பட்டாளத்துடன் திறந்து வைத்தார். அதன்பின் அமைச்சர் சீனிவாசன் திண்டுக்கல் திரும்பும் போது வத்தலக்குண்டு பைப்பாஸ் காளியம்மன் கோவில் அருகே நகரசெயலார் பீர்முகமது ஏற்பாடு செய்து வைத்து இருந்த ரத்தபொரியலையும்,குடல் குழம்பையும் ருசித்து சாப்பிட்டு விட்டு சென்றார்.