Published on 12/02/2021 | Edited on 12/02/2021

கரோனா தளர்வு அறிவிக்கப்பட்டு கல்லூரிகள் முழுமையாக செயல்பட துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்று (12.02.2021), சிறுகனூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்துவரும் மாணவிகள், கல்லூரி செல்ல கல்லூரி பேருந்தில் பயணம் செய்தனர்.

அப்போது, திருச்சியிலிருந்து சிறுகனூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்தக் கல்லூரி பேருந்து, நெடுங்கூர் பகுதியைக் கடந்தபோது பின்னால் வந்த லாரி, பேருந்து மீது மோதியது. அதில் பேருந்து நிலைகுலைந்து சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மாணவிகளில் 8 மாணவிகள் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.