Published on 05/10/2018 | Edited on 05/10/2018

சென்னை புழல் சிறையில் ஏற்கனவே சில கைதிகளுக்கு சொகுசு ஏற்பாடுகள் செய்யப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்திய நிலையில் தற்போது கைதிகளே பிரியாணி செய்து சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி மற்றுமோரு பரபரப்பையும்,சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் சிறையின் ஒரு பகுதியிலும், தோட்ட பகுதியிலும் கைதிகள் பிரியாணி சமைப்பதும், சிறையின் ஒரு பகுதியில் பிரியாணி செய்ய தேவையான காய்கறிகள், சமையல் சாமான்களை வைத்து கைதிகள் சமையல் வேலைகளை செய்யும் வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பையும்,சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.