Published on 28/04/2022 | Edited on 28/04/2022
பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை என்ற பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு தமிழக சட்டப்பேரவையில் இன்று (28/04/2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "எந்த மாநிலமும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கவில்லை என சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 200%- க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கூறுவதற்கு முன்பே தமிழகத்தில் எரிபொருளின் விலையை முதலமைச்சர் குறைத்துவிட்டார். மத்திய அரசுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த போதெல்லாம் வாட் வரி குறைக்கப்பட்டது என்பது தான் வரலாறு" எனத் தெரிவித்தார்.