Published on 02/01/2019 | Edited on 02/01/2019

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல், ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் உடனடியாக வழங்க வேண்டும் என, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தர்ணா ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவெடுத்தனர். மாநில அளவில் எடுத்த இந்த முடிவின்படி, விருதுநகர் மாவட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், மாவட்ட தலைவர் வி.அரசு தலைமையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓய்வூதியர்களும் போராடும் நிலையில்தான் தமிழகம் உள்ளது.