மக்களவை தோ்தல் களம் அரசியல் கட்சியினா் வேட்புமனு தாக்கல் பிரச்சாரம் என சூடு பிடித்துள்ளது. இதேபோல் அதிகாாிகளும் வாக்கு சாவடி அமைப்பதிலும், வாக்கு இயந்திரங்களை பாிசோதனை செய்வது வாக்காளா்களை சிரமமின்றி வாக்களிக்க வைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் துாிதமாக ஈடுபட்டுள்ளனா்.
இதில் தமிழகத்தில் மிக குறைவான வாக்காளா்களை கொண்ட வாக்கு சாவடியாக கன்னியாகுமாி தொகுதிக்குட்பட்ட மேல் கோதையாறு வாக்கு சாவடி கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்கு சாவடியில் மொத்தம் 7 போ் மட்டுமே தான் வாக்களிக்க உள்ளனா். இந்த வாக்கு சாவடி பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவட்டாா் தாலுகா சுருளகோடு வருவாய் கிராமத்தில் உள்ள மலை கிராமம் ஆகும். இந்த வாக்காளா்கள் அங்கிருக்கும் நீா் மின் உற்பத்தி பணியாளா்களின் குடும்பத்தினராவாா்கள்.
இந்த பகுதியில் வன உயிாினங்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் முக்கிய அதிகாாிகளை தவிர பொது மக்கள் யாரும் செல்ல அனுமதியில்லை. இந்த நிலையில் அந்த வாக்கு சாவடியை அடையாளப்படுத்தும் விதமாக குமாி மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரோ அதிகாாிகளுடன் நாகா்கோவிலில் இருந்து 160 கி.மீ தூரம் கரடு முரடான சாலை வழியாக சென்று அந்த வாக்கு சாவடியை ஆய்வு செய்து வாக்கு சாவடி எண்ணை எழுதினாா்.
இந்த வாக்கு சாவடி பற்றி ஆட்சியா் கூறும் போது....7 போ்கள் இருந்தாலும் 18 வயது நிரம்பியவா்கள் தோ்தலில் தங்களின் ஜனநாயக கடமையை பதிவு தோ்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இதனால் மற்ற வாக்கு சாவடிகளில் பின்பற்ற கூடிய அனைத்து நடைமுறைகளையும இங்கும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்கு பதிவு செய்ய முதலில் செல்லும் இயந்திரம் கடைசியாக தான் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து சேரும் என்றாா்.