Skip to main content

பாலியல் தொல்லை கொடுத்த தாயின் கள்ளக்காதலன்: மாணவி கண்ணீர்

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
rape


    
13 வயது மாணவி ஒருவர், தாயின் கள்ளக்காதலன் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக போலீசில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கல்லப்பட்டியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
 

 

 

அப்போது போலீசாரிடம் அந்த மாணவி, எனது தாயார் ஜீவா குடும்ப பிரச்சனை காரணமாக தந்தையை பிரிந்து வாழ்ந்து வருகிறார். எங்களது வீட்டுக்கு மாசானம் (வயது 45) என்பவர் அடிக்கடி வந்து போவார். அவர் வரும்போதெல்லாம் என்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார். இதனை பலமுறை என் அம்மாவிடம் சொன்னாலும், அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. 
 

கடந்த வாரம் மாசானம் என்னை பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் பாலியல் தொந்தரவு செய்தார். இதற்கு உடந்தையாக எனது தாயும் இருந்தார். நம்ம அன்கிள்தாம்மா என கூறினார். அதனால் தான் போலீசில் புகார் கொடுக்க வந்தேன் என்று கண்ணீரோடு கூறியுள்ளார். 
 

அதன் அடிப்படையில் ஜீவா, அவரது கள்ளக்காதலன் மாசானம் ஆகியோர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“பெண்ணிடம் தோற்று போகிறோம் என்ற ஆணின் எண்ணமே இத்தகைய கொலைக்கு காரணம்...” - மருத்துவர் ஷாலினி

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
hjk

 

 

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். பட்டியல் இனத்தை சேர்ந்த அந்த பெண்ணை இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது.

 

இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய அரசியில் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலை இன்று காலை மற்றொரு பெண் அதே போல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பலாத்காரங்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது, இதற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளதா, இதனை எப்படி தடுப்பது போன்ற பல்வேறு கேள்விகளை நாம் மருத்துவர் ஷாலினி அவர்களிடம் கேள்விகளாக நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதையும் தாண்டி அந்த பெண்ணின் சடலத்தை அவர்களின் பெற்றோரிடமே காட்டாமல் எரித்துள்ளனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள், காவல்துறையின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா?

 

இது ஒரு தடுக்கப்பட வேண்டிய சம்பவம், அதை பற்றிய அறச்சீற்றம் நமக்கு நிறைய இருக்கு. இது ஏன் ஏற்படுகின்றது, அதற்கு எது அடிப்படை காரணமாக இருக்கிறது, எவ்வாறு தடுப்பது போன்ற கோணங்களில் இந்த சம்பவத்தை ஆராய வேண்டியது அவசியமாகிறது. இதை மேலோட்டமாக கடந்து செல்ல முடியாது, அவ்வாறு செல்லவும் கூடாது. இதை ஒரு பெண்ணாக, தாயாக இதை கண்டிக்கிறேன்.

 

ஆனால் உ.பி காவல்துறையை பொறுத்தவரையில் பெண்ணுக்கு காயங்கள் இருக்கிறதே தவிர இதை குறிப்பிட்டு பாலியல் பலாத்காரம் என்று சொல்லிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்களே? 

 

ஒரு இடத்தில் அடிபடாமல், மற்ற இடத்தில் மட்டும் அடிப்பட்டிருந்தால் அதற்கு பெயர் அடிபடவில்லை என்பதா?  பாலியல் பலாத்காரம் என்பதால் நாம் ரியாக்ட் பண்ணவில்லை, ஒரு உயிர் போனதால் நாம் ரியாக்ட் செய்கிறோம். பாலியல் பலாத்காரம் செய்தார்களா என்பது சட்டப்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய ஒன்று, ஆனால் இங்கே ஒரு உயிர் போய் விட்டது. எப்படி போனது, வன்முறையால் கொடுமையாக தாக்கப்பட்டு கொலை வரை சென்றுள்ளது.  கை, கால்களை கட்டி அடித்து கொலை செய்யும் அளவுக்கு ஒரு பெண்ணின் மீது ஏன் வன்மம் வருகிறது என்ற கேள்வி இயல்பாகவே நம்மிடம் எழுகிறது. இந்த நோயின் முதல் நாடி எங்கிருந்து வருகிறது என்று நாம் பார்க்க வேண்டும். அதை நாம் கண்டறிவது என்பது இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுகிறேன். இதை நான் ஒரு சமூக நோய் என்று கூட புரிந்து கொள்கிறேன். ஆனால் தன்னுடைய ஆளுமையில் பிரச்சனை என்றால், ஓடிச்சென்று தாழ்த்தப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்வது என்பது அவனுக்கு எதனால் தோன்றுகிறது என்று பார்க்க வேண்டும். இது உ.பி மாநிலத்தில் மட்டும் இல்லை, அனைத்து மாநிலத்திலும் இதே நிலைமை இருக்கிறது. 

 

நம்முடைய இந்திய ஆண்களுக்கு நாம் பெண்களிடம் உடலுறவு விஷயத்தில் தோற்று போகிறோம் என்ற மனநிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியாவை தாண்டி ஆசிய நாடுகள் பலவற்றிலும் ஆண்களின் என்ன ஓட்டம் இதுவாகத்தான் இருக்கிறது. இந்த தோல்வி மனப்பான்மை அவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்யுமளவுக்கு கொண்டு செல்கிறது. நம்மை இந்த உறவை வைத்து கட்டுப்படுத்துகிறார்களே என்ற எண்ணம் அவர்கள் மனதில் நெடுநாட்களாக இருந்து வருகிறது. அதனால்தான் தனி ஆளாக மட்டும் சென்று இந்த கொலைபாதக செயலை செய்யாமல், நண்பர்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள். இவர்களின் ஆழ்மனதில் இருக்கின்ற வன்மத்தின் வெளிப்பாடே இவர்களை இத்தகைய கொடுமைகளை செய்ய வைக்கிறது. இதை தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. 

 

 

Next Story

பலாத்காரம் செய்ய வந்த திருடனிடம் கொரோனா இருப்பதாக பொய் கூறி தப்பித்த இளம்பெண்!

Published on 07/02/2020 | Edited on 08/02/2020

பாலியல் பலாத்காரம் செய்ய வந்த திருடனிடம் தனக்கு கொரோனா இருப்பதாக கூறி பெண் ஒருவர் தப்பித்த சம்பவம் சீனாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வூகான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 



இந்நிலையில், சீனாவில் வூகான்நகரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நகரம் ஜிங்ஷான்.  அங்குள்ள வீடு ஒன்றில் புகுந்த திருடன் ஒருவன் கொள்ளையடிக்க முயன்றுள்ளான். கொள்ளை முயற்சியில் அவர் ஈடுபட்டு கொண்டிருக்கும் போதே, அந்த வீட்டில் இளம் பெண் ஒருவர் இருப்பதை பார்த்துள்ளார். இதனால் கொள்ளை முயற்சியை கைவிட்டுவிட்டு அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்த பெண் அவரிடம் இருந்து தப்புவதற்கு என் செய்வதென்று புரியாமல் யோசித்த அவர், திடீரென தனக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக கூறி கடுமையாக இருமி பொய் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியான அவர் திருடுவதை கூட மறந்துவிட்டு வீட்டை விட்டு தெறித்து ஓடியுள்ளார்.