Published on 30/11/2018 | Edited on 30/11/2018

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. யாக இருந்த பொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுவதால், அந்த பொறுப்பிற்கு அபய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இவர் இதற்குமுன் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் ஊழல் ஒழிப்பு, தடுப்பு அதிகாரியாக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன். மாணிக்கவேல் வகித்த ஐ.ஜி. பதவி, ஏடிஜிபி -யாக உயர்த்தப்பட்டுள்ளது என்பதும், இப்போதுதான் இந்த பதவி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.