Published on 13/10/2019 | Edited on 13/10/2019
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11,919 கனஅடியில் இருந்து 12,943 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக 22,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 115.10 அடியாகவும், நீர் இருப்பு 85.86 டி.எம்.சியாக இருக்கிறது.
இதனிடையே பவானி அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஏனெனில் பவானி ஆற்றுப்பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.