பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பல தரப்பிலும் கண்டனம் வலுத்து வருகிறது. காரணமான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று மகளிர் அமைப்புகளும் வலியுறுத்துகின்றன. அச்சம்பவம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் பெண் வழக்கறிஞரான செந்திலாவிடம் இது குறித்து கேட்ட போது,
பொள்ளாச்சி சம்பவம், பதை பதைக்க வைக்கிறது. வீட்டை விட்டு பெண்கள் வெளியே போய் வந்தாலும் நம்பிக்கை இல்லாத உலகத்தில் தான் இருக்கிறோம் என்ற உணர்வு தான் ஏற்படுகிறது. தற்போதைய கால கட்டத்தில் போன் அவசியம் தான். ஆனால் அதை நம் பெண்கள் எப்படிக் கையாளுகிறார்கள். என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். கல்லூரியில் படிக்கிற பெண்கள் முன், பின் தெரியாதவர்களிடம் பழகுவதைத் தவிர்க்க வேண்டும். அதை உணராது போனதின் விளைவுதான் இது போன்ற சிக்கலில் இழுத்து விடுகிறது.
அனைத்து பெண்களின் பெற்றோர்களும் படித்தவர்கள் என்று சொல்லி விட முடியாது. படிக்காத பெற்றோர்களும் இருக்கிறார்கள். இரவில் பெண்கள் போனைப் பயன்படுத்தினால் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். போனை வாங்கி சரிபார்க்க வேண்டும் பெண்களுக்கு ப்ரண்ட் இருக்கக் கூடாதுன்னு இல்ல. ஆனா, அது நல்ல விதமான நட்பா இருக்கா என்று கண்காணிக்கனும். பெற்றோர்கள். பிள்ளைகளைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க. அவங்க கஷ்டத்தப் பெண்களும் பையனும் உணரனும். அவங்களுக்கு விசுவாசமாயிருக்கணும் பொள்ளாச்சி சம்பவத்தில பையனோ, பொண்னோ அவங்க பெற்றோர்கள். அவங்களக் கண்காணிச்சிருந்தா இந்தச் சம்பவமே நடந்திருக்க வாய்ப்பில்ல. வாட்ஸ் அப் போ, பிரவுசிங்கோ பண்ணுனா அது நல்ல விதமா இருக்கணும்.
எல்லாமே காலேஜ் புள்ளைங்க. ஒருத்தர்கிட்ட பழகுனா, அவன் என்ன விதமாப் பேசுறாம்னு நோட் பண்ணனும். சொந்தக்காரம்னாலும் பேசுறதுல பழகுறதுல ஒரு, வரை முறை இருக்கு. பேசுற விதம்னு ஒன்னு இருக்கு. ஒரு வயசுக்குமேல போயிட்டா கண்டிக்காம விட்டது தான், இந்த விளைவு. சுதந்திரமே இருந்தாலும் பெண்கள் இதுல கரெக்ட்டா இருக்கணும். இந்த சமூகத்தப் பத்திப் பொண்ணோ பையனோ படிக்கணும். அப்பத்தான் நல்லது கெட்டது. புரியும்.
என்கிற செந்திலாவின் கருத்தில், சமூகம் பற்றிய விழிப்புணர்வு வெளிப்பட்டது. சக வழக்கிறிஞர்கள் அவருடனிருந்தனர்.