திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் திராவிட விழுதுகள் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கருப்பசாமி தலைமை வகித்தார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி செல்வி, சண்முகவேல், பகதூர் ராஜா, ஜனார்த்தனன், ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர், வழக்கறிஞர் ஜெயராஜ் வரவேற்புரையாற்றினார். திராவிட இயக்க சிந்தனையாளர் செந்தமிழ் செல்வன் தொடக்க உரையாற்றினார்.விழாவில் திருச்சி சிவா .எம்.பி சிறப்புரையாற்றினார்.
இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, ''தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி நமக்கு கேட்டதெல்லாம் கொடுத்து பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். திமுகவின் கொள்கைகளை இளைஞர்கள் பட்டி தொட்டி எங்கும் பரப்ப வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழா ஓராண்டுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு, பெண்களுக்கு சமஉரிமை உள்ளிட்ட கணக்கில் அடங்கா திட்டங்களை செயல்படுத்தியவர் கலைஞர் அவரது திட்டங்களினால் அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்'' என்று கூறினார்.
இந்த விழாவில் மாவட்ட அவைத் தலைவர் மோகன், மாவட்டத் துணைச் செயலாளர் ராஜாமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தங்கராஜ், சுப்பிரமணி ,ஒன்றிய பெருந்தலைவர் சத்திய புவனா, துணைத் தலைவர் தங்கம், நகர் மன்ற தலைவர் திருமலைசாமி உள்பட கட்சிப் பொறுப்பாளர் பலர் கலந்து கொண்டனர்.