ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அலுவலகத்தில் 1.48 கோடி ரூபாய் பணம் கட்டுகட்டாக கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட அ.ம.மு.க'வைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வம் நேற்று கைது செய்யப்பட்டார்.
தேனி சிறையில் உள்ள செல்வத்தை சந்திக்க தங்கதமிழ்ச்செல்வன் திருப்பரங்குன்றத்தில் இருந்து இன்று வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசும் போது..
திட்டமிட்டு சூழ்ச்சி செய்து ஜோடிக்கப்பட்ட வழக்கு இது. அதில் செல்வம் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை ஜாமினில் வெளியே எடுத்து இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம். அ.ம.மு.க., தி.மு.க'வின் பி டீம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். அப்படி நாங்கள் பி டீம் என்றால், நாங்கள் ஏன் தேர்தலில் தனித்து நிற்கப்போகிறோம். தி.மு.க'வோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் நின்றிருக்க மாட்டோமா?" என்று பேசிய தங்கதமிழ்ச்செல்வன், நடக்கும் அ.தி.மு.க ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 35 எம்.எல்.ஏ'க்கள் தேவை. இந்த தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க'வோடு சேர்ந்து ஆட்சியைக் கலைப்போம் அப்படி ஆதரவு கொடுக்கவில்லையென்றால் தி.மு.க பயந்ததாக அர்த்தம் என்றார்
அப்போதுஆட்சியமைக்க தி.மு.க'விற்கு ஆதரவு கொடுப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டதற்கு இல்லை என கூறினார் பேட்டியின் போது மாவட்ட, நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் இருந்தனர்.