கஞ்சா வாலிபர் தாக்கியதில் காவலருக்கு கை உடைந்தது சம்பவம் திருப்பத்தூரில் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புளியங்கோட்டை பகுதியில் தினந்தோறும் வாலிபர்கள் சிலர் கூட்டமாக அமர்ந்து கஞ்சா பிடித்து வருவதாக ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசார் வருவதை கண்டதும் கஞ்சா புடைத்துக் கொண்டிருந்த வாலிபர்கள் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினர்.
அப்போது கோகுல்ராஜ் என்ற காவலர் கஞ்சா வாலிபர்களை பிடிக்க ஓடினார். அன்னை நகர்ப் பகுதியை சேர்ந்த சரவணன் மகன் ஹரி (22) என்ற கஞ்சா போதை வாலிபர், காவலர் கோகுல்ராஜ் எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டு ஓடினார். கீழே விழுந்த கோகுல்ராஜ்க்கு கை உடைந்தது உடனடியாக காவலர் கோகுல்ராஜ் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கையில் கட்டு போட்டனர். இந்த சம்பவம் குறித்து ஹரி மற்றும் மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (22) கஞ்சா போதையில் இருந்த இரண்டு வாலிபர்களை ஜோலார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 10 கிராம் கஞ்சா அளவிலான பறிமுதல் செய்தனர்.