அஜித் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். கடந்த 10 ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீசான இத்திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள நிலையில் சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் இப்படத்தை பாராட்டி வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவை விஸ்வாசம் திரைப்படத்தை தயாரித்த, தயாரிப்பு நிறுவனமான சத்யா ஜோதி பிலிம்ஸ் காவல்துறையிடம் இருந்து வந்த பாராட்டை ஏற்றுக்கொண்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
காவல் துணை ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில்,
“சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .
படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது. கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.
இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா. விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.
விஸ்வாசம் படத்திற்கு காவல் துறையிடமிருந்து வந்த இந்த பாராட்டை அஜித் ரசிகர்களும் சமூக வளையதளங்களில் அதிகம் ஷேர் செய்தும், ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.
Thank you Mr.Arjun Saravanan, Deputy Commissioner of Police, Chennai for your kind words on #Viswasam
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 16, 2019
Link to his post - https://t.co/n98XzDYs7a#PeopleChoiceVISWASAM pic.twitter.com/DMo1rFKeOu