Published on 09/06/2022 | Edited on 09/06/2022

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (09/06/2022) அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு நிதி திரட்டியது தொடர்பான ஒரு வழக்கு என்ஐஏ அதிகாரிகளிடம் உள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக, தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட 8 இடங்களில் 'National Investigation Agency' எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி என்ஐஏ அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, இந்த சோதனையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, சென்னை மண்ணடியில் சாதிக் என்பவர், என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.