Skip to main content

ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பெயரில் வசூல்...ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட எஸ்.ஐ..!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

 

"மாவட்ட அதிகாரி இன்னென்னப் பொருட்கள் வாங்கி வரக்கூறியிருக்கின்றார். அதனால் கொடுத்துவிடு.!" என என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பெயரில் ஊரிலுள்ள கடைகள் தோறும் பொருட்களாகவும், பணமாகவும் வசூல் செய்த சார்பு ஆய்வாளர் ஒருவர் மாவட்ட எஸ்.பி.யின் அதிரடியால் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

police

 

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாண்டி. இவர் தன்னுடைய வீட்டிற்குத் தேவையான பர்னிச்சர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள், பெயிண்ட் மற்றும் இன்னபிற சாமான்களை ஊரில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் இனாமாக வசூலித்து வந்திருக்கின்றார். இதற்கு இவர் பயன்படுத்தியது ஏ.டி.எஸ்.பி. வெள்ளத் துரையின் பெயரை.!" இன்னார் தான் வாங்கி வரக் கூறியிருக்கின்றார் என அவரை பெயரைக் கொண்டு மிரட்டியே பொருட்களை வாங்கி வீட்டை நிரப்பியுள்ள சார்பு ஆய்வாளர் பொருட்கள் தர மறுத்தவர்களை மிரட்ட தவறுவதுமில்லையாம். அது போக, மணல் கடத்தல் புள்ளிகளிடம் மாதந்தோறும் மாமூல் பெற்று வந்ததும் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில், இத்தகவல் மாவட்ட எஸ்.பி,ஓம்பிரகாஷ் மீனாவிற்கு தெரிய தற்பொழுது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார் சார்பு ஆய்வாளர் பாண்டி. இதனால் ஒட்டுமொத்த வணிக நிறுவனங்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்