தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு செல்லும் பாதயாத்திரை முருக பக்தர்கள் தொடர்ந்து வருட வருடம் அதிகரித்து வருகிறார்கள். இந்த வருடம் கூடுதலாக பாதயாத்திரை பக்தர்கள் நடைபயணம் மூலமாக பழனி செல்கிறார்கள்.
சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்ட பாதயாத்திரை பக்தர்கள் ஈரோடு மாவட்டம் வழியாக செல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் பாதயாத்திரையாக நடந்து செல்கிறார்கள். பழனி பக்தர்கள் நடந்து செல்லும்போது இரவில் வாகனங்கள் வருவதை தெரியாமல் பல விபத்துகள் நடந்து வருகிறது.
இதனால் ஈரோடு மாவட்ட காவல்துறை பழனி செல்லும் பாதையாத்திரை பக்தர்களுக்கு ஒளி வீசும் (ரிஃப்லெக்டர்) ஸ்டிக்கர்களை அவர்களது கை மற்றும் கால்களில் கட்டிவிட்டு அவர்கள் நடந்து செல்லும்போது அது ஒளி பாய்ச்சுவது போல் இருக்குமாறு அமைத்துள்ளனர். இதனால் விபத்துக்கள் தடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நான்கு நாட்களாக போலீசார் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு இந்த ரிஃப்லெக்டர் ஸ்டிக்கர்களை கட்டி வருகிறார்கள்.