கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நேற்று மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை என்று சொல்லப்பட்ட நிலையிலேயே உடற்கூராய்வு முடிந்தது.
மாணவி உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக ஒருபுறம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பெரிய நெசலூர் கிராமத்திற்கு செல்லும் சாலைகள், மாணவியின் வீடு, மயான பகுதி உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி சக்தி கணேஷ் தலைமையில் சுமார் 596 காவலர்களும், 150 சிறப்புக் காவலர்களும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.