Skip to main content

அமைதியாக நடந்து முடிந்த முதற்கட்ட தேர்தல்...

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்றும், 30-ம் தேதியும் என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ம் தேதி எண்ணப்படவுள்ளன.

 

first phase local body election in tamilnadu

 

 

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தல் ஓரிரு சம்பவங்களை தவிர பெரிய அளவில் வன்முறை ஏதுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது. இரண்டுக் கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி கடந்த 16-ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில், 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, 2546 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி, 4700 ஊராட்சி தலைவர் பதவி, 37,830 ஊராட்சி உறுப்பினர் பதவி என மொத்தம் 45,336 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 24, 680 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்