Skip to main content

மணல் கொள்ளையரிடம் பணம் கேட்டு கறாராகப் பேசிய போலீஸ்; பரபரப்பைக் கிளப்பிய ஆடியோ 

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

police demanded money from the sand robber and negotiated a deal

 

மணல் கொள்ளையர்களிடம் பணம் கேட்கும் போலீஸின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர மற்றும் கிராம ,உமராபாத் உள்ளிட்ட  காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட  பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் பாலாற்றில் மணல் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது . இந்நிலையில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ஆம்பூர் அடுத்த கட்டவாரபல்லி  பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மணல் கொள்ளையரிடம் பீட் பணம் இன்னும் கொடுக்கவில்லையாமே? ஏன் தரல? உடனே கொண்டு வந்து தா என தொடர்ந்து (மணல் கொள்ளையரிடம்) போன் செய்து பீட் பணம் குறைவாக கொடுத்தால் இன்ஸ்பெக்டர் மொத்த வண்டியையும் நிறுத்தி விடுவார் என தலைமை காவலர் சீனிவாசன் கறாராக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி காவல்துறையினர்  மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

 

இதுபோன்று மணல் கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்படும் தலைமை காவலர் மீது துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஆல்பட்ர் ஜான் தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்  

 

 

சார்ந்த செய்திகள்