வரலாறு காணாத விலை உயர்வின் உச்சத்தில் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வு என்று பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏற்றம் கண்டபோது பா.ஜ.க பல போராட்டங்களை செய்தது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை அடுக்கு மொழியில் பேசி ஆர்ப்பாட்டம் செய்தார். ஆனால் பாஜக ஆட்சி வந்த பிறகு எரிபொருள் விலை வைப்பதை அரசாங்கம் விட்டுக் கொடுத்தது. அதனால் தினமும் விலை ஏற்றம் தான். விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என்று மத்திய பெட்ரோலிய துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் நாடு தழுவிய போராட்டத்தை அனைத்துக் கட்சிகள் முன்னெடுத்து நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் முழு கடையடைப்பு சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. சுமார் 80 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடியுள்ளது.
பேருந்துகளில் பயணிகள் குறைவாக செல்கின்றனர். அறந்தாங்கி, ஆலங்குடி, தந்தர்வகோட்டை மற்றும் பல இடங்களிலும் சாலை மறியல் செய்த தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல தஞ்சை மாவட்டத்தில் 60 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.