Published on 07/07/2022 | Edited on 07/07/2022

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு செல்லவிருந்த விமானம் இன்று காலை திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்தது. முன்னதாக, பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைகளை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த சவுகத் சாதிக் (33) என்ற பயணியிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் நடத்தினர். இதில், அவர் உடலில் வெளிநாட்டு கரன்சிகள் மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியன் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 85 லட்சம் ரூபாய் என்று சுங்கத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. தொடர்ந்து பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.