Published on 04/02/2020 | Edited on 04/02/2020
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதை கண்டித்து விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் போராட்டம் மறியல் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக விழுப்புரம் ஜங்ஷனில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாக் தீன் தலைமையில், பொதுச் செயலாளர் அப்துல் சமது, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பால்முஹம்மது உட்பட சுமார் 350 பேர் விழுப்புரம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மதுரைக்கு செல்லும் வைகை அதிவிரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினார்கள். பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் அவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.