பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மத்திய அரசு கொண்டுவந்த இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. குறிப்பாக அப்போதைய தலைமை நீதிபதி லலித், பாட்டேல் ஆகிய இரண்டு நீதிபதிகள் அந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தங்களது தீர்ப்பில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருடத்திற்கு 2.5 லட்சத்திற்கு மேல் சம்பாதிப்பவர்கள் வருமானவரி கட்ட வேண்டும் என்ற நிலை தற்போது இந்தியாவில் இருந்து வருகிறது. 8 லட்சம் சம்பாதிப்பவர்களே ஏழைகள் என்று மத்திய அரசு கூறும் நிலையில் இது மற்றவர்களுக்கு பொருந்தாதா எனக் கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய சட்டத்துறை செயலாளர்கள், நிதித்துறை அதிகாரிகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.