Skip to main content

தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி... வங்கி நிர்வாகிகளுடன் இபிஎஸ், ஓபிஎஸ் நாளை ஆலோசனை

Published on 29/05/2020 | Edited on 29/05/2020
Permission to operate special train in Tamil Nadu ... EPS, OPS consultation with bank executives tomorrow

 

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் சிறு, குறு தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.  இந்நிலையில் வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.


சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல் தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நான்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. கோவையில் இருந்து காட்பாடி வரை, திருச்சியிலிருந்து நாகர்கோயில் வரை, மதுரையில் இருந்து விழுப்புரம் வரை அதேபோல் கோவையில் இருந்து மயிலாடுதுறை வரை என 4  ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்