தந்தை பெரியார் 145-ஆம் ஆண்டு பிறந்த நாள்; சமூக நீதி நாள் மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சென்னை வியாசர்பாடி மெக்ஸின்புரத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் அப்பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமத்துவ மாணவர்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் மத்திய அரசு கொண்டு வரும் சில திட்டங்கள் எவ்வளவு ஆபத்தானது என்பதை நாடகமாக நடத்தி காட்டினார்கள். பெண்ணுரிமை குறித்தும், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் அதனை தந்தை பெரியார் எவ்வாறெல்லாம் ஆதரித்து வந்தார் என்றும் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள்.
இந்த நிகழ்விற்கு திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் பா. மணியம்மை தலைமை தாங்கினார். திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச. பிரின்ஸ் என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார். வடசென்னை திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை இந்த நிகழ்வினை ஒருங்கிணைத்தது.