Published on 23/10/2020 | Edited on 23/10/2020
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பல்வேறு தரப்புகளிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துவந்தன. அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு சட்ட வரைவுக்கு அனுமதி அளிக்கும்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோப்புகளை அனுப்பினார்.
இந்நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 7.5% உள் இட ஒதுக்கீடு சட்ட வரைவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார். அதற்குப் பதில் அளித்த ஆளுநர், ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவெடுக்க, தனக்கு 3 முதல் 4 வாரங்கள் கால அவகாசம் தேவை எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நேற்று அறிவித்தபடி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.