"தமிழ் மாநில காங்கிரஸ் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருவது காங்கிரஸ்காரர்களுக்கு பிடிக்கவில்லை இதனால் பொய் செய்திகளை அவதூறாக பரப்புகிறார்கள்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஈரோடு விடியல் சேகர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது,
"தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்கள் வாய் கூசாமல் த.மா.கா - பா.ஜ.க வுடன் இனணவது போலவும் அதில் த.மா.கா.வினர் யாரும் போக வேண்டாம் என உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளார். இது வண்மையாக கண்டிக்கத்தக்கது. த.மா.காவானது தற்போது அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
த.மா.கா. தனித்தன்மை வாய்ந்த இயக்கம். குறிப்பாக பெருந்தலைவர் காமராஜர் ,மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் ஆகியோர் காட்டிய பாதையில் த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் வெற்றிநடை போட்டு வருகிறது.
எப்போதுமே த.மா.கா. தனது தனித்தன்மையோடு தான் செயல்படும். பா.ஜ.க.வுடன் த.மா.கா. இணைகிறது என்ற நிலை கனவில் கூட நடக்காது. நேரு, அன்னை இந்திரா காந்தி, தியாக தலைவர் ராஜீவ் காந்தி, மக்கள் தலைவர் ஐயா மூப்பனாரின் வளர்ப்பு நாங்கள் எனவே இதுபோன்ற தரமற்ற பேச்சை காங்கிரஸ் தலைவர் அழகிரி நிறுத்திக் கொள்ள வேண்டும். ஐயா மூப்பனார் காட்டிய மத சார்பற்ற பாதையில் த.மா.கா. என்றும் பயணம் செய்யும்." எனக் கூறினார் விடியல் சேகர்.
"ஜி.கே.வாசனின் தவறான அரசியல் முடிவால் விடியல் சேகர் போன்று துடிப்பாக இளைஞர்கள் பலர் த.மா.கா. என்னும் இயக்கத்தில் முடங்கிப் போய் கிடக்கிறார்கள். தன்னை நம்பி வந்த பலருக்கு அரசியல் முகவரி இல்லாமல் செய்து வருகிறார் ஜி.கே.வாசன் இது பரிதாபம்தான்" என்றார் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன்.